அன்றும் இன்றும்

 

அன்றும் இன்றும் இனி என்றும்


வரலாறு காணாத மாபெரும் வெற்றிகள்


 வைரங்களுக்கு வாழ்த்துக்கள்.
"உதைபந்தாட்டஆண்டு2017 "கிண்ணத்துடன் ஆரம்பித்தது வதிரி டயமண்ட்ஸ் 💎. மனோகரா விளையாட்டுகழகம் நடாத்திய யாழ் மாவட்ட்ட ரீதியிலான கழகங்கள் மோதும் அணிக்கு 11 பேர் கொண்ட உதைபந்தாட்ட சுற்றுபோட்டியின் மின்னொளியிலான இறுதியாட்டம் நேற்றைய தினம் இடம்பெற்றது. நாவாந்துறை சென்நீக்ளஸ் விளையாட்டுகழகத்துடனான பலமான இறுதிபோட்டியில் 2:0 என்ற கோல்கணக்கில் நீக்களஸ் விளையாட்டுகழகத்தை வீழ்த்தி 2017ம் ஆண்டை கிண்ணத்துடன் ஆரம்பித்தது எமது அணி. அணிசார்பில் நட்சத்திர வீரர் துஷிகரன் மற்றும் மூத்தவீரர் உஷாநந் ஆகியோர் தலா ஒரு கோல்களை பெற்றுகொண்டமை குறிப்பிடதக்கது. இவ்வெற்றியை அண்மையில் மறைந்த எமதுகழகத்தின் முன்னாள் வீரன் அமரர் வே.நகுலன் அவர்களிற்கு வீர்களினால் சமர்ப்பணம் செய்யபட்டதுடன் பரிசில் பெற்றுகொள்ளமுன் இரண்டுநிமிடங்கள் அவரை நினைவுகூர்ந்தமையும் குறிப்பிடதக்கது....அணிக்கு வெற்றி கேடயத்துடன் 50000/= ரூபா பணப்பரிசும் . இறுதியாட்ட ஆட்டநாயகன் விருது .பின்கள மற்றும் அணியின் அனுபவ வீரர் உஷாநந் அவர்களிற்கும் , தொடரின் சிறந்த கோல்காப்பாளர் விருது மூத்தவீரர் ஜெனார்த்தனனிற்கும் வழங்கபட்டது. Caption cool மதுசூதனன் பிறந்த நாள் பரிசாகவும் அவரது ..தலமையில் அனுபவ ,இளம் வீரர்களின் பங்களிப்புவன் தொடர்ச்சியாக கிண்ணங்களை கைப்பற்றிவரும் வைரங்களின் வேட்டை தொடர வாழ்த்துக்கள்..
 



அன்றும் இன்றும்
கொலின்ஸ் வி.க நடாத்திய KING OF JAFFNA 2013 யாழ்மாவட்ட முன்னணிகழகங்கள் மோதும் உதைபந்தாட்ட சுற்றுப்போட்டியின் பரபரப்பான மின்னொளியிலானஇறுதி ஆட்டத்தில் மயிலங்காடு ஞான முருகன் வி.க வை பெனால்டியில் வீழ்த்தி சம்பியன்பட்டத்தை சுவீகரித்தது எமது அணி 

 ஆட்டநேரமுடிவில் இரு அணிகளும் தலா இரு கோல்களை அடித்திருந்தமை
குறிப்பிடதக்கது......எமது அணிசார்பில் பிறேம்குமார்,மதுசூதனன் தலா ஒரு கோல்களை அடித்திருந்தனர்.......... தொடரின் சிறந்த கோல்காப்பாளராக எமது கழகவீரன் மதனராஜனும் தொடரின் சிறந்த பின்களவீரராக எமது கழகவீரன் உசாநந்தும் இறுதி ஆட்டத்தின் சிறந்த வீரராக எமது கழக வீரன் பிறேம்குமாரும் தெரிவானார்கள்

இன்று மீண்டும்
வரலாறு படைத்தது டயமண்ட்ஸ் !!!!! கென்றியரசர் அணி நடாத்திய வடமாகாணத்தின் முன்னணி கழகங்கள் பங்குபற்றிய 11 பேர்கொண்ட ஹென்றீசியன் சவால் வெற்றி கிண்ணத்தை கைப்பற்றியது டயமண்ட்ஸ் அணி.. சற்று முன்னர் இடம்பெற்ற மின்னொளியிலான பிரமாண்டமான இறுதிபோட்டியில் நட்சத்திர வீரர்கள் பிறேம்குமார்சாதுரியமான பந்து தட்டல்களின் மூலம் துசிகரன்,மதுசூதன் ஆகியோரின் இரட்டை கோல்கள்
மூலமும் இறுதி ஐந்து நிமிடத்தில் பிரேம்குமார் (பீமா) வின் ரசிகர்களையும் அரங்கத்தையும் அதிரவைத்த மின்னல் கோலின் உதவியோடு மயிலங்காடு ஞானமுருகன் அணியை 5:3 என்றகோல் கணக்கில் வீழ்த்தி வரலாறு படைத்தது. கழகம் ஆரம்பித்து 100 ஆண்டுகள் கடந்த நிலையில் எமது கழகம் பெற்றுகொண்ட மாகாணமட்டத்திலான சிறப்பான வெற்றியாக இது கணிக்கபடுகின்றது. யாழ் மாவட்டத்தில் மாகாண சம்பியன் கிண்ணத்தை ஏந்தும் மூன்றாவது அணியாகவும். வடமாரட்சி அணிகளில் மாகணகிண்ணத்தை சுவீகரித்த முதலாவது அணி என்கின்ற பெருமையை பெறுகின்றது ..எமது அணி வெற்றியில் பங்குகொண்ட அனைவருக்கும் எமது வாழ்த்துக்கள் வைரவேட்டை தொடரட்டும்