ஞாயிறு, 18 மார்ச், 2012








ன்ர்ள் னைருக்கும்  
புது ருவாழ்த்துக்ள்
வாழ்த்துக்ள்
WELCOME 
2019


======================================================




                             1960 ஆம் ஆண்டுகளின் பிற்பகுதியில் நீண்டகாலங்களின் பின் வெளிவந்த கல்லச்சு பதிப்பு பத்திரிகையாக வெளிவந்தது.மன்றம் பத்திரிகை. இதன் இணை ஆசியர்களாக திரு.மு.பாக்கியநாதன் அவர்களும், திரு. இரா.ஸ்ரீகாந்தன் இருந்து வெளியிட்டார்கள் அன்றையகாலகட்டத்தில் ஒவ்வொரு போயாதினத்தன்று அது வெளிவரும்.பின்பு அது பல காலமாக வெளிவராமல் நின்றுவிட்ட்து.
                                 அதன் அடுத்தகட்டமாக......
 நான் 9ம் வகுப்பு படிக்கும் காலத்தில்  காந்தண்ணாவிடம் பாக்கியவாசாவில் டியூசன் எடுத்தேன்.அப்போது எம்மூர் பல இளைஞர்கள் டியூசனில் சேர்ந்தார்கள்.பாக்கியவாசா ஆச்சி கலாசாலையாக மாறியது.எங்கள் அட்டகாசம் ஒருபுறம் அதோடு சேர்ந்த படிப்பு மறுபுறம்.நாங்கள் எல்லோரும் நன்றாக படித்தோம்.க.பொ.த (சாதா) பரீட்சையும் வந்தது.காந்தண்ணாவிடம் படித்த நாங்கள் எல்லோரும் பரீட்சையில் சித்தியும் எய்தோம்.

                   க.பொ.த பரீட்சைமுடிந்ததும் ....சும்மா இருந்தநான் ஒரு கையெழுத்து பத்திரிகையை தொடங்கினேன்.அதற்கு ஒரு பெயரை தேடினேன்.
பாக்கியவாசா ஆச்சிகலாசாலை இவை எல்லாவற்றிற்கும் பொருந்தும்படியாக ” தேக்கு “என்று அந்தகையெழுத்து பிரதிக்கு பெயரிட்(டேன்)டோம்.பாக்கிய வாசாவில் ஒரு பெரிய தேக்கு நின்றது.அதன் ஞாபகம். அச்சுப்போன்ற என் கை எழுத்துடன்,இன்றைய சினிமா போஸ்ரர் போன்ற தலை எழுத்துக்களுடனும்,சிறுகதைகளுக்கேற்ப அழகான படங்களுடனும் ஒரு தைப்பொங்கல் தினத்தன்று முதல் மலராக தேக்கு கையெழுத்து பிரதி வெளிவர தயாராகிக் கொண்டிருந்தது .

                    இவற்றையெல்லாம் பார்த்த ரசித்த காந்தண்ணா என் புத்தகத்தின் அழகைப்பார்த்து ”தம்பி தேக்கு என்ற பெயரை மாத்தி ‘மன்றம்’ என்று உன் புத்தகத்திற்கு பெயரிடு” என்றார்.நாங்கள் செய்த,இடையில் தடங்கலாக நின்ற மன்றம் பத்திரிகையை, நீ உன் அழகான கையெழுத்துமூலம் தொடரு.....” என்றார்.அவரின் ஊக்கம் எனக்கு மேலும் உற்சாகத்தை கொடுத்தது.

                     அதன் பின்பு தேக்கு என்று தொடங்கப்பட்ட அந்த மலர் மன்றம் என்ற பெயரில் வெளிவர தொடங்கியது.கையெழுத்து பிரதியானதால் வருடம் மூன்று (தை பொங்கல், தீபாவளி, புது வருடம்)மலர்களாக வெளியிட்டேன்.எல்லோரினது பாராட்டுக்களைப்பெற்ற மலராக தமிழ்மன்றத்தில் செல்வக் குழ்ந்தையாக தவழ்ந்தது எனது மன்றம் கையெழுத்து மலர். எம் மூரவர்கள் நிறையப்பேர் நிறைய ஆக்கங்களைத் தந்தார்கள், அவர்களுள் இரா.ஸ்ரீகாந்தன்(சிறுகதைகள்), எஸ்.கே.இராசேந்திரன் (ஊரைச்சுற்றிவரும் தேனி தொகுத்து சொல்லும் சம்பவங்கள்) என்பனவும், வதிரி சி.ரவிந்திரன்,கி.புஸ்பராணி ஆசிரியை ஆகியோரின் குட்டி குட்டி கவிதைகளும் எழுதி  மன்றத்தை வாசக நெஞ்சங்களின் மனம் கவர வைத்தார்கள். தி.வரதராஜன், சப்பத் சேகரன்,மாசில் மகேஸ்,அட்டைப்பட ஓவியர் இரா.ஸ்ரீதரன் ஆகியோர் முக்கிய படைப்பாளிகளாக இருந்து பத்திரிகை சிறப்பாக அமைய எனக்கு உதவி செய்தார்கள்.இப்படியான சூழலில் மன்றம் கையெழுத்து பிரதி ஒ ஓ....என்று ஒவ்வொரு தமிழர் திருநாட்களிலும் வெளிவரத்தொடங்கியது.

                        அன்றைய தமிழ்மன்ற செயலாளர் திரு S.K.இராசேந்திரன் அவர்களின் மேற்பார்வையில் திரு.N.லோகேந்திராவும், திரு.T.வரதராசனும் இணை ஆசிரியராக இருந்து மன்றம் கையெழுத்து பிரதியை வெளியிட்டு வந்தார்கள்.அது மறக்க முடியாத ஒரு காலம், அன்றைய காலக் கோளாறு காரண்மாக இடையில் வெளிவராமல் நின்ற அந்த கையெழுத்து மலர் இப்பொழுது இந்த காலத்திற்கேற்ப ” மன்றம் “ இணையதளமலராக உங்கள் முன் தோன்றத் தொடங்கிவிட்டது. அந்த மலரை ஊக்குவிப்பது உங்கள் கரங்களில்தான்  இருக்கிறது. உங்கள் ஆக்கங்களை எங்கள் மின் அஞ்சல் 
vathiry.manram@hotmail.com என்ற மின் அஞ்சல் முகவரிக்கோ ,அல்லது மன்றம் முகநூல் பிரதியின்  Messages  க்கோ அனுப்பிவையுங்கள்.

1.ஆக்கங்கள் யாவும் உங்கள்சொந்த கற்பனையாகவும்,அதற்கு பொறுப்பானவர்கள் நீங்களாகவும் இருக்கவேண்டும்.
2.யாரையும் புண்படுத்தியோ,தாக்கியோ எழுதுவதை தவிர்க்கபடவேண்டிய விடயம்.
3.முக்கியமாக அரசியல் கலக்காமல் இருக்கவேண்டும்.அரசியலுக்கு இடமே இல்லை.

                 இனி இந்த இணைய தள மன்றம் எல்லோர் மனங்களிலும்,வாசக நெஞ்சங்களிலும் நல்ல இடம் பிடிப்பது அன்பான உங்கள் கரங்களில்தான் இருக்கிறது.

                                         “நன்றே செய் அதனை இன்றே செய்”

இவண்
ஆ...ர்.