இளைஞ சேவை மன்றம்



தேசிய இளைஞர் சேவை மன்றம் 
வதிரி தமிழ்மன்ற இளைஞர் கழக 
ஐந்தாவது ஆண்டு நிறைவு விழாவும்
வருடாந்த பொதுக் கூட்டமும்
செயற்பாட்டறிக்கை 1985-1986

          இளைஞர் கழகதலைவர்அவர்களே,பிரதம விருந்தினராகக் கலந்து 
கொள்ளும்இலங்கை பனை அபிவிரித்திச்சபை தலைவர் திரு க.நடராசா அவர்களே சிறப்பு விருந்தினராக கலந்து கொள்ளும் யாழ்மாவட்ட குடும்ப நலத்திட்ட அலுவலர் திரு.ஏ.எஸ்.பூவேந்திரன் அவர்களே,யாழ் மாவட்ட இளைஞர் சேவை அதிகாரி திரு.கே.எஸ்.கார்த்தி அவர்களே,நிஸ்கோ 
முகாமையாளர் செல்ல்வி.எஸ்.மகேஸ்வரி அவர்களே,எமது இளைஞர் கழக விழாவை மங்கள் விளக்கேற்றி ஆரம்பித்து வைத்த தமிழ் மன்ற தலைவர் திரு.க.பாரிவள்ளல் அவர்களே,எங்கள் அழைப்பை ஏற்று சமூகமளித் திருக்கும் பெருமக்களே, உங்கள் அனைவருக்கும் எனது உளங் கனிந்த வணக்கத்தைக் கூறிக்கொண்டு,அதே வேளை 1985-1986 ஆண்டின் செயற்பாட்டு அறிக்கையை சமர்ப்பிப்பதில் பெருமகிழ்வடைகிறேன்.

          கடந்த நான்கு வருடங்களாக சிறப்பாக இயங்கி வந்த எமது இளைஞர் கழகம் எமது நாட்டிலும் கிராமத்திலும் ஏற்பட்ட அசம்பாவிதங்கள் காரணமாக இயங்கமுடியாமல் இருந்தது.பின்னர் கடந்தவருடம் ஆவணி மாதம் 18ம் திகதி இவ் இளைஞர் கழகத்தை வதிரி தமிழ் மன்றம் புனரமைப்பு செய்து இன்று வடமாகாண ரீதியில் முன்னிலையில் உள்ள ஓர் இளைஞர் கழகமாகத் திகழ்கின்றது. இக் காலகட்டத்தில் பதினேழு செயற்குழு கூட்டங்களை நடாத்தியிருக்கின்றோம்,இக்கூட்டங்கள் அனைத்திலும் பல உறுப்பினர்கள் கலந்து கொண்டதுடன் எமது செயற்றிட்டங்களிலும் பங்கெடுத்தமை குறிப்பிடத் தக்கது. எமது செயற்பாட்டினை கல்வி,கலை,கலாச்சாரம்,விளையாட்டு,சிரமதானம்,சுகாதாரம் போன்ற பல்வேறு கோணத்திலும் பன்முகப்படுத்தி செயற்பட்டுள்ளோம்.
                         னை அபிவிருத்திச் சபையின் தலைவர் அவர்களே, தாங்கள் எமது கிராமத்துடன் பன்னெடுங்காலமாக ஈடுபாடு கொண்டு வந்துள்ளீர்கள். இற்றைக்கு நான்கு வருடங்களுக்கு முன்னர் இலங்கையின் பல பாகங்களிலும் எமது வியாபார நிலையங்களும்,உற்பத்தி நிலையங்களும் சிறப்பாக இயங்கி எமது கிராஅத்திற்கு பெரும் மூலதனத்தை தந்ததை நீங்கள் அறிவீர்கள்.அண்மைக் காலங்களில் ஏற்பட்ட இனக் கலவரங்களினால் எமது கிராமத்தின் உடமைகள் நிர்மூலமாக்கப்பட்டு இன்று வருமானம் குறைந்த மக்களாக வாழ்வதைக் காண்கிறீர்கள்.வீட்டுக்கு வீடு தொழில் நிலையங்கள் இருந்த இக் கிராமத்தில் இன்று வ்ரல் விட்டு எண்ணக்கூடிய அளவு தொழில் நிலையங்கள் இருப்பதை நீங்கள் காணலாம்.ஆதலால் எமது மக்கள் தங்களுடைய வருமானத்தினை இழந்து தொழில் முறையை மாற்றும் சந்தர்ப்பம் ஏற்படுகின்றது..தற்பொழுது இக்கிராமத்தில் அதிகமான வீடுகளில் பனை உற்பத்திப் பொருட்கள் செய்வது அதிகரித்து வருகின்றது.இதனை ஊக்குவிக்கும் முகமாக தங்கள் சபை மக்களுக்கு உதவி செய்ய்வது மட்டுமல்லாமல் அண்மையில் திக்கம் பல் தொழில் தொகுப்பில் தும்பு வேலை தொழில் நிலையம் திறக்கவிருப்பதாகவும் அறிகின்றோம்.இத்தொழில் நிலையத்தில் எமது கிராமத்தில் படித்துவிட்டு தொழிலற்றிருக்கும் இளைஞர்,யுவதிகள் இருபத்தைந்து பேருக்கு தொழில் வாய்ப்பை ஏற்படுத்தி எமது கிராமத்தின் வருமானத்தைப் பெருக்க உதவுமாறு பணிவுடன் வேண்டுகிறேன்.
                            இலங்கை குடும்ப நல திட்ட சங்கத்தின் மாவட்ட அலுவலர் திரு ஏ.எஸ்.புவனேந்திரன் அவர்களே,எமது கிராமத்தின் மக்களுக்கு எமது இளைஞர் கழகம் சிறிய அளவில் தாய்,சேய் நலனைப் பற்றி பிரச்சாரம் செய்துள்ளது.எமது கிராமத்தில் உள்ள பல பெற்றோர்கள் இதனைப்பற்றி விரிவாக அறிவதற்கான ஒழுங்குகளை செய்துதரும் அதே நேரத்தில் இக் கிராமத்தை தங்களுடைய திட்ட கிராமங்களில் ஒன்றாகத் தெரிவு செய்து அபிவிருத்தி செய்ய உதவுமாறு அன்புடன் வேண்டுகிறேன்.தேசிய இளைஞர் சேவை மன்றத்தின் மாவட்ட அலுவலர்களே கடந்த ஐந்து வருடங்களாக தங்கள் மன்றத்தின் கீழ் எமது இளஞர் கழகம் சிறப்பாக இயங்குவதை பல சந்தர்ப்பங்களிலும் நீங்கள் கூறீயிருக்கிறியிருக்கிறீர்கள்.இருப்பினும் எமது இளைஞர் கழ்க அங்கத்தவர்களை ஊக்குவிக்கும் பொருட்டு எந்த ஒரு செயற்றிட்டத்தினையும் தங்கள் மன்றம் செய்யாததை இட்டு மிகவும் மனவேதனை அடைகின்றேன். இக் கிராமத்திற்கு ஏற்ற ஒரு அபிவிருத்தி திட்டத்தை திட்டமிட்டு நடை முறைப்படுத்தி எமது கிராமத்தின் இளைஞர்களையும் யுவதிகளையும் அதில் ஈடுபடுத்தி இக் கிராமத்தை அபிவிருத்தி செய்ய ஆவன செய்து தருமாறு தங்களை  அன்புடன் வேண்டுவதோடு அண்மையில் எம்மால் நடாத்தப்பட்ட இளைஞர்; கருத்தரங்கில் எடுத்த தீர்மானத்திற்கமைய நாம் ஆய்வு செய்த கிராமத்தில் அவர்களது குறையை போக்க ஏதாவது ஒரு அபிவிருத்தித் திட்டத்தை செய்ற்படுத்தித் தருமாறும் அன்புடன் வேண்டுகிறேன் . 
                                        மது  கிராமத்தில் நிஸ்கோ அங்கத்தவர்கள் நாற்பது பேர் இருக்கின்றார்கள். இவர்களுக்கேனும் சுய தொழில் செய்வதற்கான கடன் திட்டத்தை அமுல்படுத்தி இவர்களது வருமானத்தை பெருக்க வழி செய்வீர்கள்  என நம்புகின்றேன். 
                                      கல்வி 

                                  1985ம் ஆண்டு மார்கழியில் கல்வி பொதுத் தராதர சாதாரண தரப் பரீட்சைக்குத் தோற்றிய 11 மாணவர்களுக்கு  ஆறுமத காலம் இரவு வகுப்பினை நடாத்தினோம்.இவ் வகுப்பினை எமது தாய் சங்கமாகிய வதிரி தமிழ் மன்றத்தினர் பொறுப்பேற்று எமது கழகம் வெற்றி கரமாக நடாத்தியது.எமது நிர்வாக உறுப்பினர்கள் தினமும் இதைக் கண்காணித்து வந்தார்கள்.எமது கிராமத்தின் பல ஆசிரியர்கள் வேதனமின்றி கல்ல்வி கற்பித்தார்கள்.இதன் பலனாக மூவர் சித்தியடைந்து தற்போது கல்விப் பொதுத் தராதர உயர்தர வகுப்பில் படித்துக் கொண்டிருக்கிறார்கள்.
                                       மது கிராமத்திலுள்ள தமிழ் மன்ற பாலர் பாடசாலையில்
உதவி ஆசிரியையாக பணியாற்றிக் கொண்டிருக்கும் செல்வி.செ.சிதம்பரா அவர்களுக்கு ஆனி மாதம் தொடக்கம் ரூபா 50.00 படியாக வழங்கி வருகின்றோம்.
                                     மது செயற்குழு உறுப்பினர் மூவர் எமது செயற்பாட்டு கால்த்தில் பரீட்சையில் சித்தியடைந்திருப்பது மகிழ்ச்சிக்குரிய விடயமாகும். செல்வி.பொ.பொன்னரசி கல்விப் பொதுத் தராதர உயர்தர பரீட்சையில் சித்தியடைந்து யாழ் பல்கலைக் கழகத்திற்கு தெரிவு செய்யப்பட்டுள்ளார். எமது கழக செயலாளர் செல்வன்.கே.எஸ்.குமாரராஜன் சர்வதேச கண்க்குப் பதிவியல் பரீட்சையில் இரண்டாம் பகுதிய சித்தியடைந்து|ள்ளார். எமது கழக பொருளாளர் செல்வி.கி.திலகராணி கல்விப் பொதுத் தராதர சாதாரண தரத்தில் சித்தியடைந்து  கல்விப் பொதுத் தராதர உயர்தர வகுப்பில் பயின்று கொண்டிருக்கிறார்.இவர்களுக்கு இளைஞர் கழகத்தின் சார்பில் வாழ்த்துக்களையும் பாராட்டுக்களையும் தெரிவித்துக்கொள்கிறேன்.
                                 ருடாந்தம் 5ம் வகுப்பில் கல்வி கற்று புலமைப் பரிசில் பரீட்சையில் சித்தியெய்தும் எமது இளைஞர் கழக எல்லைக்குட்பட்ட மாணவ மாணவிகளுக்கு அமரர்.கு.சிவராசசிங்கம் ஞாபகார்த்த பரிசிலளை வழங்க திருமதி.சிவதேவி வரதராசன் அவர்கள் முன்வந்துள்ளார். வருடாந்தம் இத்திட்டம் நடை முறைப் படுத்தப்படும்.ஆதலால் 5ம் வகுப்பு மாணவர்கள் இப் புலமைப் பரிசில் பரீட்சையில் கூடிய கவனமெடுத்துப் படிக்குமாறு அன்புடன் வேண்டுகிறேன்.

                        கலை,கலாச்சாரம் 
                               
                                      மது செயற்பாட்டுக் காலத்தில் தமிழ் மன்றம் நடாத்திய இரண்டு பூரணை விருந்துகளில் கவியரங்கு,உதய கீதம் ஆகிய இரண்டு நிகழ்ச்சிகளை மேடையேற்றினோம்.உதய கீதம் நிகழ்ச்சியை எமது கிராம மக்கள் மத்தியில் போட்டி நிகழ்ச்சியாக நடாத்தி பரிசில்களையும் வழங்கியிருந்தோம்.
                              மது கிராமத்தின் சிறுமிகள்,யுவதிகள் ஆகியோரின் கோரிக்கையை ஏற்று ஒரு பரத நாட்டிய வகுப்பினை 01.02.1986 முதல் ஆரம்பித்து சிறப்பாக நடாத்தி வருகின்றோம்.எமது கிராம மாணவிகள் மட்டுமல்லாது அயற் கிராமங்களிலிருந்தும் மாணவிகள் கலந்து கொள்கிறார்கள்.இவ்வகுப்பினை செல்வி.பேரின்பநாயகி சிவகுரு அவர்கள் நடாத்தி வருகின்றார்கள்.
                                         மது ஆலயத்தில் இவ்வருட உற்சவத்தின் போது எமது இளைஞர் கழகம் சார்பில் நடாத்திய பரத நாட்டிய வகுப்பு மாணவிகளின் இரண்டு நாட்டியங்களை மேடை ஏற்றினோம்.இந் நிகழ்ச்சிகள் அனைத்தும் எம் மக்களின் பாராட்டுக்களைப் பெற்றது குறிப்பிடத்தக்கது.
                                               வ்வருடம் தேசிய இளைஞர் சேவை மன்ற்த்தினால் நடாத்தப்பட்ட மாவட்ட கலாச்சாரப் போட்டிகளில் நாட்டில் உள்ள அசாதாரண நிலை காரணமாக பங்கு கொள்ள முடியாமைக்கு மனம் வருந்துகின்றோம்.எமது கிராமத்தில் ஆற்றல் உள்ள இளைஞர்களும் யுவதிகளும் இருக்கிறார்கள் இனிவரும் காலங்களில் நிட்சயமாக கலாச்சாரப் போட்டிகளில் பங்கு கொள்வோமென உறுதியளிக்கிறேன்.

                            விளையாட்டு 

                                             சிறு தொகைப் பணத்துடன் இந்த எமது இளைஞர் கழகத்தின் வருமானத்தைப் பெருக்கிய நிதித்திட்டம் இதுவாயாகும். எமது இளைஞர் கழகத்தின் காலத்தில் இரண்டு உதை பந்தாட்டச் சுற்றுப் போட்டிகளை வெற்றிகரமாக நடாத்தி முடித்தோம். வடமராட்சிப் பகுதியிலுள்ள 28 கழகங்கள் இப் போட்டிகளில் பங்குபற்றின. ஒரு சுற்றுப் போட்டியை பிரதான சுற்றுப் போட்டியாகவும் இரண்டாவது சுற்றுப் போட்டியை கரவெட்டி உதவி அரசாங்க அதிபர் பிரிவின் முன்னாள் விளையாட்டு அதிகாரி அமரர் எம்.சீவரத்தினம் அவர்களின் ஞாபகார்த்தச் சுற்றுப் போட்டியாகவும் நடாத்தினோம்.வல்வை விளையாட்டுக் கழ்கம்,வதிரி பொமேர்ஸ் விளையாட்டுக் கழகம் ஆகியன முதலாம் இடங்களையு, புத்தூர் விளையாட்டுக் கழகம், கலட்டி ஐக்கிய விளையாட்டுக் கழகம் ஆகியவை இரண்டாம் இடங்களையும் பெற்றன.இப் போட்டிகளின் பரிசளிப்பு விழாவில் எமது கிராமத்திலிருந்து தற்போது நைஜீரியாவில் பொறியியலராகக் கடமையாற்றும்திரு.க.பாலச்சந்திரன் அவர்களும் அவரது துணைவியாரும்பிரதம விருந்தினர்களாக கலந்து கொண்டர்கள்.இப் போட்டியினை எமது தமிழ் மன்றத்தின் முன்னாள் தலைவர் திரு.வ.இராஜேஸ்வரன் அவர்கள் ஆரம்பித்து வைத்தார். எமது கிராமத்தில் உள்ளவர்களும் ஏனைய அயற்கிராமத்திலுள்ளவர்களும்,சில வர்த்தக நிறுவனங்களும் பரிசில்கள் வழங்கி உதவின.இச் சுற்றுப் போட்டிகள் இரண்டினையும் பருத்தித்த்துறை மாவட்ட உதைபந்தாட்ட மத்தியஸ்தர் சங்க மத்தியஸ்தர்கள் இலவசமாக மத்தியஸ்தம் செய்து தந்தார்கள்.இவர்களுக்கு எமது நன்றியை தெரிவித்துக் கொள்கிறேன்.
                                               மது இளைஞர்களின் உடல் நலத்தினை அபிவிருத்தி செய்யும் நோக்கோடு அவர்களை உதைபந்தாட்டப் பயிற்சியில் ஈடுபடுத்துவதற்காக தேசிய இளைஞர்கள் சேவைகள் மன்றம் ஒரு உதை பந்தினை வழ்ங்கியது.வதிரி தமிழ் மன்ற பாலர் பாடசாலையின் இவ்வருட விளையாட்டுப் போட்டிக்கான மைதான ஒழுங்கினை எமது கழ்கம் சிறப்பாகச் செய்து கொடுத்து உதவியது. 

                            சுகாதாரம் 
                               
                                      மது நாட்டில் தற்போது இருக்கும் நெருக்கடியான நிலையில் நாம் ஒவ்வொருவரும் முதலுதவியை அறிந்து வைத்திருப்பது அவசியமாகும்.இதனைக் கருத்திற் கொண்டு 10.10.1985 ல் ஒரு முதலுதவிப் பயிற்சி நெறியினை ஆரம்பித்து வைத்தோம். இப் பயிற்சி நெறியில் இருபது இளைஞர்,யுவதிகள் கலந்து கொண்டார்கள்.எமது கிராமத்திலுள்ள பதினைந்து கிணறுகளுக்கு குளோறின் போட்டு சுத்தம் செய்தோம்.இந் நடைமுறையை ஆறு மதங்களுக்கொரு தடவை நடாத்தி வருகின்றோம்.இதனால் எமது மக்கள் ஓரளவில் கிருமிகள் அற்ற நீரைக் குடிக்கக் கூடியதாகவிருக்கிறது.
                                   வதிரி தமிழ் மன்றத்தினால் நடாத்தப்பட்டு வரும் மாதாந்த மருத்துவ சேவை நிலையத்திற்கு எமது கழ்கத்தைச் சேர்ந்த உறுப்பினர்களாகிய செல்வி.கா.தேன்மதி,செல்வி.மா.சிலம்புச்செல்வி ஆகியோரை மருத்துவ உதவியாளராக பணியாற்ற அனுமதித்தோம். இவர்களின் சேவை திருப்திகரமானதாகவும்,மக்களுக்கு அவசிய மானதென்பதை அறியக் கூடியதாகவிருக்கின்றது.
                                                            தற்போது எமது பிரதேசத்தில் விசர்நாய் கடி அதிகரித்திருப்பதால் இதனைக் கட்டுப் படுத்தும் நோக்கோடு எமது பொது செளக்கிய அதிகாரியின் உதவியுடன் எமது கிராமத்திலுள்ள சில நாய்களுக்கு இலவசமாக விசர்நாய் தடுப்பூசி போட்டுள்ளோம்.இதன் மூலம் எமது மக்களை விசர்நாய் கடியிலிருந்து பாதுகாத்துக் 
கொண்டோம்.
                                     தேசிய இளைஞர் சேவை மன்றத்தின் கிளிநொச்சி பயிற்சி நிலையத்தில் வழங்கப்பட்ட தச்சு வேலை பயிற்சி நெறி,விவசாய பயிற்சி நெறி ஆகிய நெறிகளுக்கு எமது கழகத்தின் சார்பில் செல்வன்.இ.குணரத்தினராசன்,செல்வன்.தி.திலகராசன்,செல்வன்.செ.இன்பராசன் ஆகியோரை தெரிவு செய்திருந்தோம்.நாட்டில் உள்ள மோசமான நிலமை காரணமாக இவர்கள் அப் பயிற்சி நெறியில் கலந்து கொள்ளமுடியாமல் போய்விட்டது.

                                   கருத்தரங்கு 
                               

                                      டமராட்சிப் பகுதியிலுள்ள கிராமங்களை அபிவிருத்தி செய்யும் நோக்கோடு இப் பகுதியில் வாழும் அறுபது இளைஞர் யுவதிகளுக்கு இரண்டு நாள் பயிற்சிக் கருத்தரங்கினை தேவரையாளி இந்துக்கல்லூரியில் 02.08.1986-03.08.1986 ஆகியஃ இரு தினங்களும் நடாத்தினோம்.இக்கருத்தரங்கை எம்முடன் அறவழிப் போராட்டக் குழுவும் இணைந்து ந்டாத்தியது.இக் கருத்தரங்கில் இளைஞரும் அரசியலும்,இளைஞரும் தொழில் முயற்சிகளும்,அரச தனியார் நிறுவனங்களின் உதவிகளும் பயிற்சி வசதிகளும்,பனை வளம் ஊட்டக சுய நினைவு நோக்கிய திட்டங்களும் நடைமுறைகளும்,நல்ல இளைஞர்களை உருவாக்குவதில் எழுத்துத்துறையின் பங்களிப்பும்,இளைஞரது கல்வியும் வேலை வாய்ப்பு வசதியும்,கிராமிய அபிவிருத்தித் திட்டங்களில் உள்நாட்டு வெளிநாட்டு மூலதனங்களும், இளைஞர்களும் இளைஞர்களின் அபிவிருத்திப் ப்ங்கெடுப்பும் ச்மூக மாற்றத்தில் அவர்களின் பங்கும்.....ஆகிய தலைப்புக்களின் கீழ் விரிவுரைகளை நடாத்தினோம்.
திருவாளர்கள். வி.மகாகலிங்கம் ,கே.எஸ்.கார்த்தி ,எஸ்.கோகுலதாசன் ,எஸ்.வன்னியகுலம்,எஸ்.சோமசுந்த்ரம்,வி.ஜி.தங்கவேல்,வி.எஸ்.சுவாமிநாதன் ஆகியோர் சிறந்த விரிவுரைகளை நடாத்ஜ்ட்ர்ஹினார்கள்.இக் கருத்தரங்குப் பயிற்சியாளருக்கு வெளிக்களப் பயிற்சியாக தேவரையாளிக் கிராமத்தில் ஆய்வு நடாத்தும் பயிற்சி நடாத்த்ப்பட்டது.இத்துடன் பனம் பொருள் உற்பத்தி பற்றி பனை அபிவிருத்தி சபையின் திக்கம் பல் தொழில் நிலையத்தையும்,பனம் சாராய  வடிசாலையையும் பார்வையிட்டனர்.இதன் மூலமாக இப்பயிற்சியாளர்கள் தத்தமது கிராமங்களில் சுய பொருளாதாரத் திட்டங்களை வகுப்பதோடு தங்கள் கிராமங்களை அபிவிருத்தி செய்யவும் வாய்ப்பை ஏற்படுத்திக் கொடுத்துள்ளோம். இந்தக் கருத்தரங்கின் பிரதான அம்சமாக அமைந்த தேவரையாளிக் கிராமத்தின் ஆய்வு அறிக்கையை அறவழிப் போராட்டக் குழுவும்,தேசிய இளைஞர் சேவைகள் மன்றமும் பரிசீலனை செய்து அக்கிராமத்திற்கான அத்தியாவசிய தேவைகளை வழங்குவதற்கு இணக்கம் தெரிவித்துள்ளார்கள். இக் கருத்தரங்கிற்கான இரண்டுநாள் உணவிற்கான செலவினை அறவழிப் போராட்டக் குழுவும்,ஏனைய செலவினை எமது இளைஞர் கழ்கமும்,கட்ட்டை வேலி நெல்லியடி பல நோக்கு கூட்டுறவுச் சங்கமும்,திரு.மா.கதிரமலை அவர்களும் வழங்கியது குறிப்பிடத்தக்கது.இப் பயிற்சி நெறியில் கலந்து கொண்ட பயிற்சியாளருக்கு அறவழிப் போர்ராட்டக் குழுச் செயலாளர் திரு.க.ஜீவகதாஸ் சான்றிதழ்களை வழங்கினார். 

                            சிரமதானம் 
                               

                                      திரி பூவற்கரைப் பிள்ளையார் வீதியிலிருந்து தமிழ் மன்றத்திற்கு வரும் பாதை சீர் இப்பாமல் இருந்தமையால் மக்கள் பாவனைக்கு உதவாததாக இருந்தது.இளைஞர் கழகத்தின் சிரமதானத் தொண்டர்கள் செப்பனிட்டு மக்கள் போக்குவரத்து செய்யக் கூடியதாக மாற்றியுள்ளார்கள்.வதிரி கலா நிலைய கிராம அபிவிருத்திச் சங்கத்தின் கோரிக்கையை ஏற்று அச் சங்கத்தினால் ஒப்பந்த மூலம் நிர்மாணிக்கப்பட்டுவரும் திக்கம் பல் தொழில் தொகுப்பின் தும்புத்தொழில் கட்டிடத்தின் ஓடு போடும் வேலைய எமது சிரமதானத் தொண்டர்கள் சிறப்பாக செய்து முடித்துள்ளார்கள். 
                                     பொது 
                               


                                மது கிராமத்தின் பொருளாதார அபிவிருத்தியை மையமாகக் கொண்டு இருபது குடும்பங்களை பண்ணை வளர்ப்பில் ஈடுபடச் செய்யும் நோக்குடன் இவர்களுக்கான் நிதியைப் பெறும் நோக்கோடு இவர்களுக்கான நிதியைப் பெறுவதற்கு தேசிய இளைஞர் சேவைகள் மன்றத்திடம் ஒரு சாத்தியக்கூற்று அறிக்கையை சமர்ப்பித்தோம். இதன் மூலமாக சுழற்சி முறையில் பணத்தைக் கொடுத்து பின்னர் அறவிட்டு கிராமத்தில் உள்ள அனைவருக்கும் உதவி வழ்ங்கத் திட்டமிட்டுள்ளோம்.நாட்டின் சீரற்ற நிலை காரணமாக இதற்கான நிதி கிடைக்காததன் காரணமாக இத் திட்டத்தை நடைமுறைப் படுத்த முடியாமல் போய்விட்டது.

                                      மது கிராமத்தில் பல கலமாக திருமணப் பதிவினை மேற் கொள்ளாத பல தம்பதிகளுக்கு திருமணப் பதிவு செய்வத்ற்கான நடவடிக்கைகளை மேற்கொண்டோம்.இதற்கான படிவங்கள் அனைத்தும் பூரணப் படுத்தி தயார் நிலையில் வைத்துள்ளோம். இப் பதிவினை குறைந்த செலவுடன் செய்து தருவதற்கு வடமராட்சிப் பகுதியின் விவாகப் பதிவாளர் திரு.கி.பவனந்தன் அவர்கள் சம்மதம் தெரிவித்துள்ளார்.
                              வல்வெட்டித்துறை இராணுவ முகாமில் இருந்து ஏற்பட்ட பாதிப்பினால் இடம் பெயர்ந்து அப்பகுதியிலிருந்து இடம் பெயர்ந்த பலர் எமது கிராமத்தின் சில வீடுகளில் குடியேறியுள்ளார்கள்.இவர்களுடைய அடிப்படை வசதிகளை ஏற்படுத்திக் கொடுக்கும் பொருட்டு இவர்களுடைய பெயர்ப் பட்டியல் ஒன்றை தயாரித்து கரவெட்டி உதவி அரசாங்க அதிபருக்கும்,தேசிய இளைஞர் சேவை மன்றத்தினருக்கும், வல்வெட்டித்துறை பிரஜைகள் குழுவிற்கும்,ஏனைய பல பொது ஸ்தாபனங்களுக்கும் அனுப்பி வைத்துள்ளோம்.
                                                  மது இளைஞர் கழக அங்கத்தவர்களில் முப்பத்துரு பேருக்கு தேசிய இளைஞர் சேவை மன்றத்திடம் இருந்து அடையாள அட்டைகளைப் பெற்றுக் கொடுத்துள்ளோம் தேசிய இளைஞர் சேவ்சி மன்றத்தின் மாவட்ட சம்மேளனக் கூட்டத்தில் எமது செயற்குழு உறுப்பினர்கள் செலவன்.கே.எஸ்.குமாரராஜன்,செல்வன்.கே.தர்மேந்திரா ஆகியோர் கலந்து கொண்டார்கள். எமது செயலாளர் மாவட்ட சம்மேளனத்தின் அமைப்பாளராகத் தெரிவு செய்யப்பட்டார்.
                                        எமது கழகத்தின் சிறந்த விளையாட்டு வீரன் அகால மரணமடைந்த ஆசிரியர் அமரர் சு.புஸ்பராஜன் அவர்களுடைய மரணம் குறித்து ஒரு மாத காலமாக கேளிக்கை நிகழ்ச்சிகளை இடைநிறுத்தம் செய்து எமது அனுதாபத்தை தெரிவித்துக் கொண்டோம்.
                                        எமது இளைஞர் கழகத்தின் செயற்காலத்தின் நிறைவினை ஒட்டி எமது இளைஞர் கழ்க உறுப்பினர்களின் ஒத்தாசையுடன் வதிரி தமிழ்மன்ற கிளைச் சங்கங்களின் பிரதி நிதிகளும் இளைஞர் கழக உறுப்பினர்களும் ஒரு இராப் போசன விருந்தினை 15.09.1986 ல் நடாத்தினோம்.இவ் வைபவத்திற்கு எமது கழ்கத்தின் போசகர் திரு.தி.வரதராசன் அவர்களும் அவரின் துணைவியாரும் பிரதம விருந்தினராகக் கலந்து கொண்டனர்,
                                       எமது கழகத்தின்செயற்பாட்டுக் காலங்களில் நடாத்தப்பட்ட சகல கலை,கலாச்சார நிகழ்ச்சிகளுக்கு சிறந்த முறையில் இலவசமாக ஒலி ஒளி அமைப்பு செய்து தந்த செயற் குழு உறுப்பினர் திரு.நா.லோகேந்திரன்(BabyArts) அவர்களுக்கு எமது விசேட நன்ற்களை கழகத்தின் சார்பில் தெரிவித்துக் கொள்கிறேன்.
                                              இக் கால கட்டத்தில் என்னோடு ஒத்துழைத்த செயற்குழு உறுப்பினர்களுக்கும்,இக் கிராமத்தின் ஏனைய இளைஞர் யுவதிகளுக்கும்,எமக்கு வேண்டிய பொழுதெல்லாம் ஆலோசனை வழங்கிய எமது இளைஞர் கழக போஷகர் திரு.தி.வரதராசன் அவர்களுக்கும்,எமக்கு வேண்டிய உதவிகளை வழங்கிய பொது நிறுவனங்களுக்கும்,எமது தாய்ச் சங்கமாகிய வதிரி தமிழ் மம்றத்திற்கும் அதனுடன் இணைந்த ஏனைய சங்கங்களுக்கும் இளைஞர் கழகத்தின் சார்பில் உளங்கனிந்த நன்றியைத் தெரிவித்து விடை பெறுகிறேன்.

                                                    நன்றி -வணக்கம்
கே.எஸ்.குமாரராஜன்.
செயலாளர்
இளைஞர் சேவை மன்றம்
15.09.1986