தொழில் நுட்ப பாடநெறி


THEORY & PICTURES:LOGENDRA
ELEC- HVAC-BMS SUPERVISOR - DOHA QATAR

அலகு 1 :- எயர்கண்டிசன்
AIRCONDITIONER

     
யர் கண்டிசன் என்பதை தமிழில் வளி சீராக்கி என்று சொல்லுவார். இருந்தும் எயர்கண்டிசன் என்ற சொல்லையே தமிழிலும் எல்லோரும் உபயோகிக்கின்றார்கள்.இது எல்லோருக்கும் விழங்கக்கூடியதாக இருப்பதால் இப்பாட நெறிக்கு அச்சொல்லையே பாவிப்போம். இன்னும் சுகமாக கூறினால் ஏ.சி (A/C) என்றும் சொல்லலாம்.எயர் கண்டிசன் என்று சொல்லும் போது குளிர்சாதனப் பெட்டி போன்று குளிரச்செய்வது மட்டும் நோக்கமாக உடையது அல்ல என்பதை மனதில் கொள்ள வேண்டும்.கடும் குளிரான இடத்தில் குளிர் காற்றை சூடாக்கவும், சூடன இடத்தில் வெப்பக்காற்றைக் குளிரச்செய்வதும் போன்ற வேலையைச் செய்யும் இயந்திரம் தான் எயர்கண்டிசன்.
அதாவது பாவனையாளரின் தேவைக்கேற்ப காற்றை சூடாக்குவதோ அல்லது குளிராக்குவதோ என்ற செயலை இந்த இயந்திரம் செய்வதால் தமிழில் வளி சீராக்கி என்று சொல்கிறோம். தமிழில் வளி சீரக்கிதான் இப்பொழுது நம்மவர் மத்தியில் எயர் கண்டிசன் (AIR CONDITION) என்று அழைக்கப் படுகின்றது. 

                               மது இலங்கை நாட்டைப் பொறுத்தவரையில் காற்றை சூடாக்கும் அமைப்புடைய எயர்கண்டிசன்கள் அதிகம் பாவனையில் காண்பது அரிது.இவை குளிர் நாடுகளிலேயே அதிகம் பாவிக்கப்படுகின்றன.குளிர் சாதனப் பெட்டியைப் போல் ஒரு சிறிய இடத்தை மட்டும் குளிர்விப்பதாக இல்லாமல் ஒரு அறையை,ஒரு மண்டபத்தை, ஒரு கட்டடத்தின் எல்லா இடங்களையும் அல்லது தேவையான இடங்களை மட்டும் குளிரச்செய்ய அல்லது சூடாக்க எயர்கண்டிசன்கள் உபயோகப்படுகின்றன.மேலும் குளிர் சாதனப் பெட்டியில் குளிரை ஏற்படுத்த அதன் உள்ளே எவேப்பரேட்டரை அமைத்து அந்த எவேப்பரேட்டரை குளிரச்செய்வதன் மூலம் குளிர்சாதனப் பெட்டியினுள் குளிரைச் 
செலுத்துகிறோம். ஆனால் எயர்கண்டிசன்கள் குளிரச் செய்யவேண்டிய இடத்திலுள்ள
காற்றை இழுத்து குளிரடைந்திருக்கும் எவேப்பரேட்டருக்கு ஊடாகச் சென்று மீண்டும் படம் 2 இல் காட்டையது போல் குளிரடைய வேண்டிய இடத்திற்கு செலுத்துகின்றன.சூடாக வேண்டுமாயின் சூடாக்க வேண்டிய இடத்திலுள்ள காற்றை இழுத்துச் சூடாக இருக்கும் ஹீற்றருக்குடாகச் சென்று சூடாக (படம்-2) வேண்டிய இடத்திற்குச் செலுத்துகின்றன.இவ்வாறு மீண்டும்,மீண்டும் தொடர்ச்சியாக நடை பெறுவதன் மூலம் பாவனையாளர்களின் தேவைக்கேற்ப காற்றின் வெப்ப நிலை சீராகப் படுகின்றது.குளிர் சாதனப் பெட்டியிலிருப்பது போலவே எயர்கண்டிசன்களிலும் ஒரு குறித்தளவு காற்றின் வெப்பநிலை சீராக்கப்பட்டதும் இயக்கம் தடைப்படவும்,தேவையேற்படும் போது மீண்டும் தொடரவும் ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன. அப்படி காற்றின் வெப்பநிலைக்கு ஏற்றமாதிரி தேவையான சாதனத்தை இயக்கும் கருவிதான் தேமஸ்ராட் (THERMOSTAT ) என்னும் கட்டுப்பாட்டு சுவிச்..இந்த சுவிச்சினூடாக நாம் வெப்பநிலையை கட்டுப்பாட்டுக்கு கொண்டுவந்து சீராக்கலாம்.பின்னுக்கு வரும் பகுதிகளில் தேமஸ்ராட் பற்றிய விபரங்களை தெளிவாக அறியலாம். 

                     யர்க் கண்டிசன்களின் இயக்கத்தைப் பொறுத்த வரையில் மேற் கண்டவாறே எல்லா வகையான எயர்க்கண்டிசன்களும் இயங்குகின்றன. அப்படி இயங்கினாலும் எயர்க் கண்டிசன்களின் இயக்கப் பிரயோகம், குளிர்விக்க அல்லது சூடாக்க அப்படியான தேவைக்கு வேண்டிய இடத்தின் அளவு , அமைப்பு  என்பவற்றைப் பொறுத்து வேறு படுகின்றன. இந்த வகையில்   ஐந்து வகையான எயர்க்கண்டிசன்கள் பாவனையில் உள்ளன.
அவையாவன
1.விண்டோ எயர்க்கண்டிசன் - WINDOW AIR CONDITION
2. ஸ்பிளிற் ரைப் எயர்க்கண்டிசன் - SPLIT TYPE  AIR CONDITION
3. பக்கேஜ் பிளன்ற் எயர்க்கண்டிசன் - PACKAGE PLANT AIR CONDITION
4.சென்றல் பிளன்ற் எயர்க்கண்டிசன் - CENTRAL PLANT AIR CONDITION
5. ஓட்டோமொபைல் எயர்க்கண்டிசன் - AUTO MOBILE AIR CONDITION
ஆகியனவையாகும். இவற்றைப்பற்றி இனிவரும் பாடங்களில் தனித்தனியே ஆராய்வோம். அதற்கு முன்னாடி நாம் எயர்க்கண்டிசனுக்குள் உள்ள அடிப்படை உதிரிப் பாகங்களைப் பற்றிக் கொஞ்சம் கவனிப்போம். அவற்றில் மிகவும் முக்கியமாக நாம் அறிந்து கொள்ள வேண்டியவை

1. கொம்பிரசர் - COMPRESSOR 
2. கண்டென்சர் பான் மோட்டர்- CONDENSER FAN MOTOR
3. புளோவர் பான் மோட்டர் - BLOWER FAN MOTOR
4. கப்பாசிற்றர் - CAPACITOR

என்பனவாகும். ஆரம்பத்தில் இவைகளைப் பற்றி சில விடயங்கள் அறிந்து கொள்வது. மிக சிறந்தது.                      

 1. கொம்பிரசர் - COMPRESSOR 
ஒரு மனிதனுக்கு இதயம் முக்கியம் என்பது போல் எயர்க் கண்டிசனின் முக்கிய உதிரிப்பாகம் தான் அமுக்கி இதை ஆங்கிலத்தில் கொம்பிரசர் (COMPRESSOR) என்பர்கள்.படம் 3 இல் கொம்பிரசரின் அமைப்பைப் பார்து அறியலாம். இவை
சாதாரண கொம்பிரசர்கள். இந்த கொம்பிரசர்களை சாதாரண சாளர எயர்க்கண்டிசன் (WINDOW AIR CONDITION) களிலும் ஸ்பிளிற் ரைப் எயர்க் கண்டிசன்களிலும் காணலாம். இதைவிட பல மடங்கு கூடிய அமுக்கு திறன் உள்ள கொம்பிரசர்களும் இருக்கின்றன. அவற்றைப் பற்றி பின்பு அறிவேம்.இப்பொழுது சாதாரண் இந்த கொம்பிரசர்களுடன் ஆரம்பிப்போம். கொம்பிரசர்கள் சின்னன் பெரிது என்றாலும் அவற்றின் தொழில் பாடுகள் ஒன்றே. படம் 3 லும் படம் 3A இலும் காட்டியபடி
E  என்பது மின்சார இணைப்பு பகுதியாகும் (ELECTRICAL BOX). அடுத்தது S இது குளிரூட்டப் பயன்படும் வாயு கொம்பிரசருக்கு உள்ளே புகுத்தும் வளியை கொண்டு செல்லும் பைப் அமைந்திருக்கும் (SUCTION LINE) பகுதியாகும். மூன்றவதாக D. D இது  கொம்பிரசருக்கு உள்ளே இருக்கும் வாயுவை குளிராக்கப்படும் இடத்திற்கு கொம்பிரசருக்கு வெளியே கொண்டு செல்லும் பைப் அமைந்திருக்கும்  (DISCHARGE LINE) பகுதியாகும். இவை மூன்றும் தான் இப்பொழுது நமக்கு தேவையான அடிப்படை விளக்கங்களாகும். ஆரம்பத்திலேயே இவற்றைப் பற்றி நன்றாகத் தெரிந்து கொண்டால் பின்பு வரும் பகுதிகளை மிகவும் தெளிவாக புரிந்து கொள்ளலாம்.

2. கண்டென்சர் பான் மோட்டர்- CONDENSER FAN 
                            எயர் கண்டிசனில் கொம்பிரசரின் அமுக்கத்தால் மூலம் வெளியாகும் வாயுவை சேகரித்து  வைத்து அதனை சுத்திகரிக்கும் பகுதிதான் கண்டென்சர் (CONDENSER) என்று சொல்கிறோம். இந்த கண்டென்சரை குளிராக்க பாவிக்கப்படுவது தான் கண்டென்சர் பான் மோட்டர். படம் நான்கில்
கண்டென்சர் பான் மோட்டர்களை காண்கிறீர்கள் இவை வின்டோ எயர்க் கண்டிசன்களிலும், ஸ்பிளிற் ரைப் எயர்க்கண்டிசன்களிலும் காணலாம். இவை எப்பொழுது கொம்பிரசர் இயங்குகிரதோ அப்பொழுது தான் இந்த மோட்டர்கள் ஓடத்தொடங்கும், அப்படி ஓடும் போது மோட்டரின் தண்டத்தில் பொருத்தப் பட்ட விசிறி சுழலும் போது அதனால் ஏற்படும் காற்று கண்டன்சரில் பட்டு கண்டன்சரை குளிராக்கும்.
          அப்படி கண்டன்சரை குளிராக்க இந்த பான் மோட்டர் பாவிக்கப் படுவதனால் தான் இதனை கண்டென்சர் பான் மோட்டர் என்று நாம் சொல்கிறோம். படம் 5ல் விசிறி பொருத்தப்பட்ட பான் மோட்டரை காகிறீர்கள். இந்த கண்டென்சர்  பான் மோட்டர்கள் இயங்காமல் தனியே கொம்பிரசர் மட்டும் இயங்கினால் கொம்பிரசரின் அமுக்கத்தால் வெளியே தள்ளப்படும் வாயு அதிக அமுக்கமாகி  HIGH PRESSURE கூடி  பைப் சூடாகி கண்டென்சர் பைப்புக்களை வெடிக்கவும் செய்யும். இந் நிலையின் கொம்பிரசர் கேடாகவும் சந்தர்ப்பம் இருக்கிறது. இவற்றையெல்லாம் கவனமாக பார்த்து எயர் கண்டிசன்களை பாவிக்கவேண்டும். பராமரிக்க வேண்டும்.

3. புளோவர் பான் மோட்டர் - BLOWER FAN 
                                        புளேவர் மோட்டர் என்பது  குளிரான  பகுதிக்குள்  காற்றைத்
தெறிக்கவிட்டு அங்கிருந்து குளிர் காற்றை தேவையான இடத்திற்கு தள்ளவே  பயன் படுத்தப் படுகின்றன. இதன் வடிவத்தை படம் 6 ல் பர்த்து அறியலாம். படம் 6 ல் A என்பது புளோவர் என்பதாகும். இது விசிறி போல் காற்றை வீசுவதற்காக பயன்படுத்தப் படுகின்றன். அடுத்தது B . இது மோட்டர் , இந்த மோட்டரின் முன் தண்டத்தில் (MOTOR SHAFT )  C ல் காட்டியது போல A எனும் புளோவர் பொருத்தப்பட்டிருக்கும். இதைத்தான் புளோவர் மோட்டர்  என்கிறோம். இதில் முக்கியமானதொன்றைக் கவனிக் கவேண்டும். அதாவது மோட்டர் B இன் தண்டம்  நீளமாக இருப்பதை அறிவீர்கள். இப்படி நீளமாக இருக்கும் மோட்டர்கள் வின்டோ எயர்கண்டிசன்களிலேயே அதிகம் பாவிக்கப்
படுகின்றன. படம் 6A ல் காட்டியது போல B எனும் மோட்டரின் முன் பகுதியில் உள்ள  நீளமான தண்டத்தில் புளோவரைப் பொருத்தி மோட்டரை இயக்கும் போது அங்கே சீரான ஒரு வளி மண்டலம் தோன்றும் . அந்த வளிமண்டல்த்தில் உள்ள காற்று குளிரான பகுதியில் பட்டு வெளியேறும் போது குளிர் காற்றாகவும் இதே போன்று சூடான பகுதியில் பட்டு வெளியேறும் போது சூடான காற்றாகவும் பவனையாளருக்கு கிடைக்கிறது. இதுதான் எயர்க் கண்டிசன்களில் உள்ள புளோவர் மோட்டரின் செயல் பாடு.   

4.கப்பாசிற்றர் - CAPACITOR
                          கப்பாசிற்றர் (CAPACITOR) இதை தமிழில் மின்தேக்கி என்று சொல்வார்கள். இந்த பயிற்சி நெறிக்கு கப்பசிற்றர்  என்றே நாம் பாவிப்போம். கப்பாசிற்றர் (மின்தேக்கி) என்பது மின்சாரத்தை சேமித்து வைக்கும் ஒரு பொருளாகும்.இவை வலுகூடிய மோட்டர்களின் இயக்கத்தை ஆரம்பிப்பதற்காக உயர் மின் வழங்கப் படுவதற்கு மட்டும் பாவிக்கப்படுகின்றன. இது மின் அணுக்களான இலத்திரன்களையும் புரோத்தன்களையும் சேமித்துக்கொள்கின்றன. இவை மோட்டர்களை இயக்கவே எயர்க்கண்டிசன்களில் பாவிக்கப்படுகொன்றன. இவற்றில்  மோட்டார் தொடக்க மின்தேக்கிகள் STARTING CAPACITOR மோட்டார் துவக்க கட்டத்தின்போது பயன்படுத்தப்படுகின்றன இவை மோட்டர்கள் முன்னரே தீர்மானிக்கப்பட்ட வேகத்தை அடைய மின் வலுவை கூட்டிக் கொடுக்கிறது. இதை மின் தேக்கு திறன் என்றும் சொல்லலாம். மின்தேக்கு திறன் என்பது ஒரு CIRCUIT இல் எவ்வளவு மின்னாற்றல்லை மின்தேக்கிகளில் சேமித்து வைக்கும் அளவு என்பதை குறிப்பதாகும். இது CAPACITOR அல்லது மின்தேக்கி பண்புகளை குறிக்க பயன்படுத்தப்படுகிறது.அப்படி கொடுக்கும் போது அந்த மோட்டார் அதிகபட்ச வேகத்தில் 75% ஓட வைக்கும். இந்த கப்பசிஸ்ற்றர்கள் மின்தேக்கிகள் வழக்கமாக 70 μF க்கும் அதிகமான கொள்ளளவை கொண்டிருக்கும். அவைகளின் நோக்கம் தேவைகளுக்கு ஏற்ப பொறுத்து பல்வேறு மின்னழுத்த மதிப்பீடுகளில் இயக்கி மோட்டர்களை இயங்க
  வைப்பர். கப்பாசிற்றர்கள் அதிகமாக பாவிக்கப்படுவது  மின்சார மோட்டர்களின் ஆரம்பத்தில் ஒரு கூடுதலான  உந்து துணை கொடுக்கவே. படம்7ல் கப்பாசிற்றர்களின் மாதிரிகளை காணலாம். மின்தேக்கி எனும் கப்பாசிற்றர்களின் அளவுகளை மைக்ரோஃபார்ட்ஸ் (μF) என்ற அலகால் கணிக்கப்படுகின்றது. பரட் (FARED) என்பது இதைக் கண்டுபிடித்தவரின் பெயராகும். ஒரு பரட் என்பது 1,000,000 பத்து இலட்சம் மைக்ரோ பரட் ஆகும். மைக்ரோபரட்டை MDF என்றும் ,ஒரு பரட்டை Uf என்றும்  சுருக்கமாக் பெயரிட்டு அழைப்பர். பழைய மின்தேக்கிகள் வழக்கத்திற்கு மாறான வகையில் "mfd" அல்லது "MFD" என்று பெயரிடப்பட்டிருக்கலாம், இந்த அளவுகள் மோட்டர்களின் பருமனுக்கு ஏற்றமாதிரி மாறும். சாதாரணமாக விண்டோ எயர்க்கண்டிசன்களில்  கொம்பிரசர் இயக்கம் ஆரம்பிக்க 35 தொடக்கம் 100 MFD கப்பாசிற்றர்களும்,மின் மோட்டர்கள் இயங்க ஆரம்பிக்க 4 தொடக்கம் 6 MFD கப்பாசிற்றர்களும் பாவிக்கப்படுகின்றன. கப்பாசிற்றர்களை எப்படி மோட்டர்களுடன் இணைக்கவேண்டும் என்ன்பதை பின்பு வரும் பாடங்களின் அறிவோம்.
அருகில் ஒரு அட்டவணை தரப்பட்டுள்ளது. இது எயர்கண்டிசன்களின் கம்பிரசர்களின் அமுக்குதிறனையும் அதன் அமுக்கு திறனின் வேகத்தையும் அந்த வேகத்தின் அளவுகளுக்கு தேவையான கப்பாசிட்டர்களின் அளவுகளுமே தரப்பட்டுள்ளன. இதன் முழுவிபரங்களை கொஞ்சம் அறிவோம் என்றால் BTU என்ன, TON என்றால் என்ன என்பதைப்பற்றி கீளே உள்ள விபரத்தில் தெளிவாகத் தந்துள்ளேன்.
                    ன் எயர்கண்டிசனுக்கு ஏன் ரண் கணக்கீடு வைக்கப்பட்டிருக்கிறது என்பது பற்றி யாராவது யோசித்திருக்கிறீகளா, ஒரு எயர்கண்டிசனை நாம் வாங்கும் போது நாம் TON கணக்கை சொல்லித்தான் வாங்குவோம். 1 TON என்பது 12000 BTU க்கு சமம். BTU என்றால் .BRITISH THERMAL UNIT என்பது பொருளாகும்.  
       ஒரு வீட்டின் அறையின் கன அளவும் (நீளம் X அகலம் X உயரம் )   அந்த அறையின் அளவிற்கு ஏற்ற மாதிரி குளிரைக் கொடுக்கக் கூடிய எயர்க்கண்டிசனின் வலுவும் அடங்கிய அட்டவணை ஒன்று  தரப்பட்டுள்ளது.
அட்டவணை 2ல் அவ்ற்றைக் காணலாம். அந்த அட்டவணைப்படி ஒரு புதிய A/C ஒன்று வாங்க கடைக்கும் போது முதலில் உங்கள் உங்கள் அறையின் கன  அளவை 10’x10'x10' என்று சொல்லி கேட்டக வேண்டும். அப்படி கேட்கும் போது அந்த வியாபாரி தனது A/C விற்பனை  திறனின் அனுபவத்ததை கொண்டு 1TON A/C காணும் என்பார். ஒரு 1TON A/C ஒரு ரண் எயர்க்கண்டிசன் என்பது அந்த எயர்கண்டிசனின் எடையைக் கொண்டதல்ல. அந்த 1TON A/C  ஒரு மணி நேரத்தில் அந்த வீட்டின் அறையில் இருந்து எவ்வளவு உஷ்ணத்தை சூட்டை வெளியேற்றுகின்றது என்பதே அந்த அளவாகும். அது எப்படியென்று பார்த்தால், ஒரு ரண் உள்ள ஒரு A/C ஒரு நிமிடத்திற்கு (12000 BTU) பன்னிரண்டாயிரம் BTU உஷ்ணத்தை வெளியேற்றுகின்றது என்பதேயாகும்.
                ஒரு BTU என்பது ஒரு தீக்குச்சியை முற்றாக எரித்தால் உண்டகும் வெப்பத்தின் அளவே ஆகும். எனவே ஒரு ரண் (1TON A/C) என்பது ஒரு மணி நேரத்தில் 12000 BTU வெப்பத்தை வெளியேற்றுகிறது என்பதே அதன் அளவாகும். அப்படியானால் ஒரு ரண் 1 என்பது ஒரு மணிக்கு 1200 தீக்குச்சிகள் எரிந்து முடியும் வரை உண்டாகும் உஷ்ணத்தின் அதாவது சூட்டின் அளவாகும்.
                                 தற்கு ஏன் ரண் என்ற அளவு வைக்கப்பட்டது என்பதைப் பற்றிப் பார்ப்போம். ஏசி மெசின் கண்டுபிடிக்க முன்னர் அன்றைய காலத்து மக்கள் கோடை காலங்களில் ஆறுகளிலும் ஏரிகளிலும் படர்ந்திருந்த பனிக்கட்டிகளை எடுத்துக் கொண்டு வந்து தங்கள் வீட்டையும் உணவையும் குளிரூட்ட பயன்படுத்தி வந்தார்கள். அவ்வாறு குளிரூட்டப்படும் போது ஒரு ரண் நிறை கொண்ட பனிக்கட்டி அதாவது 2000 (1TON = 2000 POUNDS) பவுண்ட் ஒரே அளவில் நாள் முழுக்க உருக எடுக்கும் உஷ்ணத்தின் அளவுதான் 286000 BTU அதாவது சராசரியாக ஒரு மணி நேரத்திற்கு 12000 BTU ஆகும். எனவே ஒரு ரண் பனிக்கட்டி ஒரு மணி நேரத்தில் ஒரே அளவு உருகுவதற்கு 12000 BTU தேவைப்படும் என்ற அளவை வைத்தே தான் எயர்க்கண்டிசன்களுக்கு ரண் (TON) என்ற அளவு நிர்ணகிக்கப்பட்டுள்ளது.

அலகு 2 :- வின்டோஎயர்கண்டிசன்
WINDOW AIRCONDITIONER
                                         வின்டோ எயர்கண்டிசன்கள் WINDOW AIR CONDITION ஓருவீட்டின் வெளிப்பக்க சுவரில் பொருத்தக்கூடிய ஒரு எயர்கண்டிசனாகும்
வீட்டிற்கு சாளரம் இருக்கும் இடத்தில் இதைப் பொருத்துவதால் இதற்கு
விண்டோ எயர்கண்டிசன் என்று
பெயர். இருந்தாலும் ஒரு சாளரத்தை அதாவது யன்னலைத் திறந்தால் எப்படி கற்றோட்டம் வீட்டினுள் வருகிறதோ அதோபோல் இந்த எயர் கண்டிசன்களும் இயங்கும் போது அதேபோல் நல்ல காற்றோட்டத்தி கொடுக்கும். படம் 8ல் காட்டப்பட்டது போல் வின்டோ எயர்கண்டிசன்கள் இருக்கும்.இவை வடிவமைப்புக்கள், தோற்றங்கள், அளவுகள்,வலுக்கள் என வேறுபட்டவைகளாக இருந்தாலும், அவை வேறு வேறு செய்யப்பட்டவைகளாக இருந்தாலும் அதனை சுவற்றில் அமைக்கும் முறை, இயக்க அமைப்பு என்பவற்றில் வேறுபாடில்லை. படங்கள் 9 .10 களில் காட்ட்ப்
பட்டவை போல் ஒரு யன்னலிலோ அல்லது ஒரு சுவரிலோ பொருத்தி வெளியே சூட்டையும், உள்ளே குளிர் காற்றையும் செலுத்தக் கூடியவாறு இவைகள் அமைந்துள்ளன, இந்த எசி கள் இயங்கும் போது அறைக்கு வெளியே உள்ள ஏசி யின் கண்டன்சர்  பகுதி சூடாகும் போது உள்ளே உள்ள மின் விசிறி  (கண்டன்சர் பான்)மூலம்
அதாவது நான் ஆரம்பத்தில் கூறியது
கண்டன்சர்பானகள் CONDENSER FAN அவற்றின் சூட்டை தணிக் கின்றன.  இப்படிகண்டன்சரின் சூட்டைதணிக்க 
பாவிக்கப் படும் காற்று வெளியே சூடு
காற்றாக இந்த பான்கள் மூலம்
தள்ளப் படுகின்றன.  அப்படியான ஒரு செயல்பாடு இருப்பதனால்தான் இந்த 
எயர் கண்டிசன்களி இப்படி பொருத்தி  பாவிக்கிறார்கள். இதன் அடுத்த விசேசம் என்ன வென்றால் குளிர் காற்று எப்படி உள்ளே போகின்றது. ஆரம்பத்திலேயே புளோவர் பான்  BLOWER FAN   என்ற ஒரு உதிரிப்பாகத்தைப் பற்றி நாம் பார்த்தோம். இந்த புளோவர் மோட்டர் வின்டோ எயர்க்கண்டிசன்களில் அறைக்கு உள்ளே உள்ள பகுதிக்குள் இருக்க்கும். வின்டோ ஏசி களில் அறைக்கு உள்ளே உள்ள பகுதியை கூலிங் (COOLING COIL ) எவேப்பரேற்றர் என்று சொல்வோம்.அந்த எவ்ப்பரேற்றருக்குள் கூலிங் கொயில்கள் (COOLING COIL ) இருக்கின்றன. இந்த கொயில்களின் மேல் வரும் குளிருக்கூடாக புளோவர் பான்கள் காற்றை செலுத்தி மறு பக்கத்தால் அறைக்கு உள்ளே மீண்டும் தள்ளுகின்றன. இப்படி ஒரு இயக்கம் வின்டோ எயர்க்கண்டிசன்களில் நடை பெறுவதால் அறைக்குள் குளிர் காற்று கிடைக்கின்றன்.

பாடம் 3 :- வளிசீராக்கியின் இயக்கம்.
                                   ளி சீராக்கி ஒரு எயர்க்கண்டிசன் எப்படி இயங்குகின்றது என்பதைப்பார்ப்போம். முதலில் வின்டோ எயர்க்கண்டிசன்களில் இருந்து ஆரம்பிப்போம். ஒரு வின்டோ எயர்க்கண்டினினுள் இருக்கும் பொருட்களும் அவை பொருத்தப்பட்ட இடங்களையும்  படம் 11 ல் தெளிவாகக் காண்லாம்.
 சாதாரண ஒரு வின்டோ ஏ சி யில்
1.கொம்பிரசர்
2.டிஸ்சார்ஜிங் பைப்
3.கொண்டென்சர் கொயில்
4.கபில்ரி டியூப்
5.பில்ரர்
6.எவேப்பரேற்றர்
7.சக்ஸன் பைப்
9.கொண்டென்சர் பான்
10.புளோவர் பான்    
11. செலக்ரர் சுவிச்  
12.சக்ஸன் வால்வ்  13.டிஸ்சார்ஜிங் வால்வ் 
என 13 பொருட்கள் இருக்கின்றன.
அதை விட மின்சார இணைப்பு பகுதியில் அதற்குரிய வேறு பொருட்களும் இணைக்கப்பட்டுள்ளன். இவ்வளவு உதிரிப் பாகங்களையும் கொண்டு அமைக்கப்பட்டது தான் ஒரு வின்டோ எயர்க்கண்டிசன்.  இனி ஒரு வின்டோ எயர்க்கண்டிசன் எப்படி இயங்குகின்றது என்பதைப் பற்றி ஆராய்வோம். எயர்க்கண்டிசனை தமிழில் வளி சீரக்கி என்று சொல்வார்கிகள்.
                                   தன் வாயுச் சுற்றோட்டத்தைப் பொறுத்த வரையில் கொம்பிரசரினால்.இழுத்து அமுக்கி அனுப்பப்படும் வாயு டிஸ்சார்ஜ் (DISCHARGE PIPE) பைப்பினூடாக கொண்டென்சருக்குள் செல்லும்.அங்கே கொண்டென்சர் பான் மூலம் சூடு தணிக்கப்பட்டு வாயுத்திரவமாக (LIQUID) மாற்றப் பட்டு இடையில் இருக்கும் பில்ரர்களினூடாக (FILTER) சுத்திகரிக்கப்பட்டு சிறிதாகப்படும் கப்பிலரி பைப்புக்களை சென்றடையும்.பெடிய பைப்புக்களில் இருந்து சிறிய கப்பிலரி பைப்புக்களுக்குள் வந்து  அங்கு மேலும் அமுக்கம் அடைந்து அந்த அமுக்கத்தினால் குளிரும் அடைந்து உள்ளேயுள்ள எவேப்பரை வந்து அடையும். அப்பொழுது எவேப்பரேற்றர் மேலும்  மேலும் குளிர் நிலையில் இருக்கும். அப்பொழுது புளோவர்களினால் அறையில் உள்ள காற்றை இழுத்து குளிரடைந்துள்ள எவேப்பரினுள் தள்ளி மீண்டும் வேறு வளியாக அறைக்குள் கொண்டு செல்லும்.
அருகில் உள்ள படம் 2 ல் இந்த காற்று சுற்றோட்டத்தை நீங்கள் காணலாம். அனுப்பப்படும் அந்தக் காற்று குளிர்காற்றாக அறைக்குள் தங்கி சுற்றுவதால் அந்த அறை சில்லென்ற குளிர் அறையாக மாறுகின்றது. அப்படி ஒரு சுற்றோட்டம் நடை பெறுவதனால் மீண்டும் மீண்டும் புளோவரினால் அறையில் உள்ள காற்றை எவேப்பரினூட்டக செலுத்தப்பரும் போது எவேப்பரேற்றருக்குள் இருக்கும் காற்று குளிரை இழப்பதினால் அந்த வாயுத்திரவ்ம் ஆவியாகி வாயுவாக மீண்டும் சக்ஸன் SUCTION PIPE  பைப்பினூடாக மீண்டும் கொம்பிரசரை அடையயும். இப்படி ஒரு வாயுச் சுற்றோட்டம் தான் எயர்க்கண்டிசன் களில் நடை பெறுகின்றன. அதனால் தான் எயர்க்கண்டிசன்களை தமிழில் வளி சீராக்கி என்று பொருள்பட சொல்கின்றனர்.                                                                                                     
  பொதுவாக கொம்பிரசர்களினுள் இருந்து இயங்கும் பிஸ்டன்களினால் சக்ஸன் பப்புக்களில் உள்ள வாயு உறிஞ்சப்படும், அப்படி உறிஞ்சப்பருவதை ” சக்ஸன் ஸ்றோக் “ என்றும்,  கொம்பிரசர்கள் இயங்கும் போது  டிஸ்சார்ஜ்  பைப்புக்களினால் வாயு வெளியேற்றப் படுவதை  ”கொம்பிரசர் ஸ்றோக்” என்றும் , கொம்பிரசர்களினால் வாயு சூடு தணிக்கப்பட்டு திரவமாக மாற்றப் படுவதை ”கொண்டென்சன்” என்றும் தொழில் நுட்பவியலாளர் சொல்வார்கள்.
                    சாதரணமாக இதுவும் குளிர் சாதனப் பெட்டியின் வாயுச்சுற்றோட்டம் போன்றே இருந்தாலும், கொம்பிரசரின் வலு, கொண்டென்சரின் அளவு, எவேப்பரேற்றரின் அளவு, கப்பிலரி ரியூப்களின் தொகைகள் அளவுகள் என்பனவும், கொண்டென்சரின் சூடு தணிக்க பாவிக்கப்படும் கொண்டென்சர் (மின்விசிறி) மோட்டர்களும் , கூலிங் எவேப்ரர்களின் ஊடாக காற்றை இழுத்து வேறு வழியால் மீண்டும் அறைக்குள் காற்றை அனுப்பும் புளோவர் மோட்டர்கள் என்பன மாறுபட்ட உதிரிப் பாகங்களாக இருக்கும்,அதுவும் வின்டோ எயர்க்கண்டிசன்களில் ஒரே
மோட்டரில் இரண்டு பக்கங்களிலும் காற்றை வீசும்  திறன்  கொண்ட மோ
ட்டர் படம் 6Aல் காட்டியது போல்  இருப்பதை நீங்கள் அவதானிக்கலாம். கொண் டென்சர்கள், எவேப்பரேற்றர்
என்பன சிறிய கொப்பர் பைப்புக்களினால்
வடிவமைக்கப் படுகிறன. அவை எயர்க்கண்டிசன்கள் மற்றும் கம்பிரசர்களின் வலுக்களின் திறனைக் கொண்டு அளவுகள் மாறுபடும். கபிலரி டியூப்புகள்  2 தொடக்கம் 3 அடி நீளமுடையதாகவும், 0.056 சென்ரி மீற்றர் குறுக்களவு உடையதாகவும் இருக்கும். அவையும் கொம்பிரசர்களின் வலுவைப் பொறுத்தும் குளிரச்செய்யும் இடத்தின் அளவைப் பொறுத்தும் வித்தியாசமான அளவுகளில் இருக்கும். கொண்டென்சர் பான்கள் மின் விசிறிகள் போல் காற்றை வெளியே தள்ளக் கூடியவைகளாக அமைந்திருக்கும். புளோவர்களும் அவை பொருத்தப் பட்ட மோட்டர்களும் மின் விசிறி போல் இருந்தாலும் அவை ஒரு பக்கத்தால் காற்றை இழுத்து இன்னொரு பக்கத்தால் காற்றைத் தள்ளக்கூடியாதாக அமைந்துள்ளதாக இருக்கும். இவற்றின் படங்களை படம் 5, படம் 6 களில் தெளிவாக பார்த்து அறியலாம்.
                                                 இதுவரை ஒரு விண்டோ எயர்க்கண்டிசன்களில் எவ்வாறு வாயுச் சுற்றோட்டம்  அமைந்துள்ளது, அது எவ்வாறு நடைபெறுகின்றது, அப்படி நடக்கும் போது எப்படி குளிர் ஏற்படுகிறது என்பவற்றைத் தெளிவாக ஆராய்ந்தோம். அத்தோடு இன்னுமொரு உதிரிப்பாகத்தைப் பற்றியும் நாம் அறிய வேண்டும். அதுதான் (AIR FILTER) எயர்பில்ரர் எனும் பொருள். இது ஸ்பொஞ்சினால் செய்யப்பட்ட காற்றை வடிகட்டும் ஒரு பொருளாகும். இவை ஏயர்க் கண்டிசன்களின் எவேப்ரர்களின் முன்னால் இருக்கும் ஒரு பொருளாகும், புளோவரினால் அறையில் உள்ள காற்று இழுக்கப்படும் போது ,அப்போது அறையில் உள்ள தூசிகளும் இழுக்கப்படும். அந்த தூசிகளை வடிகட்டி எவேப்ரர்களினூடாக கொண்டு செல்லவே இந்த பில்ரர்கள் பயன் படுத்தப்படுகின்றன.அப்படி இந்த பில்ரர்கள் இல்லாமல் புளோவர்கள் காற்றை இழுத்தால் முழு தூசிகளும் எவேப்ரர்களில் படிந்துவிடும்.அப்படி படிவதனால் ஒரு தெளிவான சீரான காற்றோட்டம் கிடைக்காமல் போய்விடும்,அப்படியான வேளையில் குளிரும் கிடைக்காது.’                          இங்கே நாம் முக்கியமாக கவனிக்க வேண்டியது என்ன வென்றால் காற்றுச் சுற்றோட்டம் நடைபெற்றாலும் பொருத்தப்பட்ட பில்ரர்களில் தூசிகள் அதிகமாக இருந்து அடைபடும் போது காற்றுச் சுற்றோட்டத்தின் போது நடைபெற வேண்டிய அறையின் காற்றை (அறையை) குளிர வைக்கும் திறன் அரியாக நடை பெறாமல் போய்விடும். இந்த பில்ரர்கள் இருக்கச் செய்வதன் மூலம் அறையில் உள்ள காற்று எவேப்பரேற்களினூடாக புளோவர்களினால் இழுக்கப்படும் போது தடையின்றி அறைக்குள் சென்றடையும்.அதற்காக வாரம் ஒருமுறை இந்த பில்ரர்களை கழுவி சுத்தம் செய்வது மிகமுக்கியமான ஒரு செயலாகும்.
                                 இனி ஒரு வின்டோ எயர்க்கண்டிசன்களின் மின்னோட்டம், மின் இணைப்புக்கள் அதன் பராமரிப்புக்கள் என்பவற்றைப் பற்றிப் பார்ப்போம். அடுத்தபாடத்தை இவை சம்மத்தமான விபரங்களைப்பற்றி ஆராய்வோம்.
அலகு 3 :- எயர்கண்டிசன் மின் இணைப்பு
AIRCONDITION WIRING 
                         வின்டோ எயர்க்கண்டிசன் மின்சுற்றோட்டத்தில் கொம்பிரசரும் அதை இயக்க அதனுள் ஒரு மோட்டரும்,கண்டென்சர் பான் அதோடு சேர்ந்து புளோவர் பான் இவை இரண்டிற்கும் பொதுவாக ஒரு மோட்டருமாக மொத்தம் இரண்டு மோட்டரகள் இருக்கின்றன. இவை இரண்டும் மின்சாரத்தினால் இயக்கப் படுகின்றன. அறையினுள் குறித்த அளவு குளிரை நிலைக்கச்செய்ய தேமஸ்ராட் THERMOSTAT SWITCH சுவிச்சும்,  கொம்பிரசரையும், கண்டென்சர் புளோவர் என்பவற்றின் மோட்டரை இயக்கப்படுவதற்கான அந்த மோட்டர்களின் இயக்கத்தை ஆரம்பிக்க கப்பாசிஸ்ரர்களும் STARTING CAPACITOR , தேவைக்கு ஏற்றபடி புளோவரின் வேகத்தை கூட்டவும் , குறைக்கவும், வசதியாக SELECTOR SWITCH செலெக்ரர் சுவிச்சுகளும், கொம்பிரசரை அதிகமான மின் அழுத்தத்தில் இருந்து பாதுகாக்க OVERLOAD ஓவலோட் உபகரணங்களும் பாவிக்கப் படுகின்றன. இவைபற்றியும் இவற்றின் அடிப்படை பாவனை பற்றியும் ஆரம்பத்தில் கொஞ்சம் அறிந்துள்ளோம். ஆகையால் இப்பொழுது கொம்பிரசர், புளோவர், கண்டென்சர் என்பவற்றை இயக்கும் மோட்டர்கள் பற்றியும், அவற்றிற்கு பாவிக்கப்படும் கப்பாசிஸ்ரர்கள் பற்றியும், அத்தோடு செலெக்ரர் சுவிச், தேமஸ்ராட் சுவிச் என்பவற்றைப் பற்றி படிப்பதோடு அவை பாவனைக்காக தொடுக்கப்படும் மின் இணைப்பைப் ப்ற்றியும் கொஞ்சம் விபரம் அறிய முயற்சிப்போம்.

மோட்டர் - மின் இணைப்பு :-
                     கண்டென்சர்,புளோவர் என்பவற்றை இயக்குவதற்கான மோட்டரை கண்டென்சர் பான் மோட்டர் (CONDENSER FAN MOTOR) என்று அழைக்கலாம்.இது வினோஎயர் கண்டிசன்களில் எவேப்பரேட்டருக்கும் கண்டென்சருக்கும் நடுவில் பொருத்தப்பட்டிருக்கும்.இங்கே புளோவருக்கும் கண்டென்சருக்கும் ஒரே மோட்டரை பயன்படுத்துவதை அறியலாம்.இதன் தண்டம் (SHAFT) நீளமாக இருக்கும்.படம் 13 ல் பார்த்து அறிந்து
கொள்ளலாம். இந்த மோட்டரில் இருக்கும் தண்டத்தில் புளோவர் பக்கத்தில் இருக்கும் தண்டத்தில் புளோவர் பிளேட்டும் கண்டென்சர் பக்கத்தில் இருக்கும் தண்டத்தில் பான் பிளேட்டும் பொருத்தப்பட்டிருக்கும். இந்த மோட்டர்களை நாம் விரும்பியபடி  வேகங்களை கூட்டிக்குறைக்கலாம். அதன் மின்னிணைப்பு பெரும்பாலானவை ஹய்,மீடியம்,லோ (HIGH,MEDIUM,LOW) என பிரிக்கப்பட்டு 
உள்ளே மின்னிணைப்பு செய்திருக்கும்.இதன் மின் இணைப்பின் மாதிரியை படம் 14 ல் பார்த்து அறிந்து கொள்ளலாம்.மூன்று வேகம் கொண்ட மோட்டரின் மின் இணைப்பு இது.அசல் (ORIGINAL) மோட்டரின் இணைப்பில் எட்டு ரேர்மினல் வயர்கள் வெளியே வரும். கறுத்த வயர் நியூட்ரல்,சிவப்பு வயர் லைன்,பச்சை வயர் ஏத்,இரண்டு பிறவுண் வயர்கள் கப்பாசிற்றர், நீல வயர் குறைவான வேகம்,மஞ்சள் வயர் நடுத்தர வேகம்,ஒரேஞ் வயர் அதி வேகம் என்று பாகுபடுத்தப்பட்டிருக்கும்.இந்த மின் இணைப்பின் படி  செலக்ரர் (SELECTOR SWITCH ) பயன்படுத்தி நாம் மின் இணைப்பைக் கொடுத்து மின்சாரத்தை பாச்சவேண்டும். மூன்று வேகம் கொண்ட மோட்டர்களிலேயே இப்படி மின் இணைப்பு இருக்கும்.மற்றைய படி சாதாரண அசல் (ORIGINAL)  மோட்டர்களில் மூன்றே மூன்று வயர்களும், திருத்தம் செய்த (REWINDING) மோட்டர்களில் நான்கு வயர்களும் இருக்கும்.

செலக்ரர் சுவிச் மின் இணைப்பு :-
                                      செலக்ரர் சுவிச் என்பது எயர்கண்டிசன் களிலிருந்து  நாம் என்ன மாதியான சேவையைப் பெற விரும்புகிறோமோ அதைப் பெறுவதற் 
கான உந்து கோலே செலக்ரர் (SELECTOR SWITCH ) சுவிச் ஆகும்.இந்த செலக்ரர் சுவிச்சுக்கே நாம் வெளியே இருந்து மின்சாரத்தைக் கொடுக்க வேண்டும். அதன் அடுத்த பகுதியில் மோட்டர்,கொம்பிரசர், தேமஸ்ராட்.....என்பவற்றை  இணைக்க வேண்டும்.ஹீற்றர்  (HEATER ) உள்ள எயர் கண்டிசன்களானால் அதையும் இணைக்கவேண்டும்.இந்த செலக்ரர் சுவிச்சை இயக்குவதன் மூலமாகத்தான் நாம் நமது தேவைக்கேற்ப  குளிர்கற்று, சூடுகாற்று ,காற்றின் வேகங்கள் என்பவற்றை நமது  எயர்கண்டிசன்களில் பெறமுடியும். குளிர்காற்று சூடுகாற்று என்பவற்றைப் பெறுவதற்கு நாம் பிரத்தியேகமாக தேமச்ராட் THERMOSTAT SWITCH என்ற ஒரு கருவியையும் பொருத்த வேண்டும். இதுதான் குளிராக்கத்திற்கு பயன் படுத்தப்படும்


கொம்பிரசரையும் சூடு காற்று தரும் கீற்றரையும் இயங்க வைக்கிறது.செலக்ரர் சுவிச்,தேமஸ்ராட்,கொம்பிரசர்,பான் மோட்டர்,கப்பாசிட்டர்கள் என்பவற்றின் மின் இணைப்பு படம் 15 ல் காட்டப் பட்டுள்ளது.படம் 16 ல் செலக்ரர் சுவிச்களின் சில மாதிரிகைகளையும் காணலாம்,















காத்திருங்கள் அடுத்த பதிவிற்காக 
இன்னும் தொடர்ந்து 
வாரா வாரம் வரும்  இந்த தொழில் நுட்ப பாட நெறி
அவ்வப்போது கிடைக்கும்வேளை
உங்கள் பார்வைக்கு வரும்,.